வணக்கம்
தமிழ்.கணிமை இணைய வலைவாசல் உங்களை வரவேற்கிறது.
தமிழ் இணைய, வலைப்பதிவுத் தொகுப்புகளின் சங்கமமான தமிழ்.கணிமை.காம், செய்தியோடை மூலம் திரட்டும் வாய்ப்புள்ள, யூனிகோடில் எழுதப்படும், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தமிழ் தளங்களை திரட்டித் தொகுத்துத் தருகிற ஒரு வலைவாசலாக அமைக்கப் பட்டுள்ளது.
வலைப்பதிவுகளைப் பொறுத்தவரை தமிழ்.கணிமை ஒரு திரட்டிகளின் திரட்டாகவும் வகைப்படுத்தப் பட்ட நேரடித் திரட்டுகளையும் கொண்டது. வலைப்பதிவுகள் மட்டுமல்லாமல் செய்திகள், மின்னிதழ்களும் இங்கு திரட்டப் படுகின்றன.
தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளான தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், போன்ற திரட்டிகள் மற்றும் வகைப்படுத்தப்பட்ட திரட்டுகளான மாற்று, கில்லி, வலைச்சரம், ஸ்னாப் ஜட்ஜ் போன்றவற்றில் இறுதியாக திரட்டப் பட்ட வலைப்பதிவுத் தலைப்புகளை இங்கு பார்வையிடலாம். இவை தவிர இன்னும் சில வகைப்படுத்தப் பட்ட தொகுப்புகளும், பிற திரட்டிகளில் இணைக்கப் படாத பதிவுகளுக்கான திரட்டுகளும் உள்ளன. இந்த வகையில் கிட்டத்தட்ட தமிழின் அனைத்து வலைப்பதிவுகளையும் தானாகவே திரட்டும் விதத்தில் தமிழ்.கணிமை.காம் செயல்படுத்தப் படுகிறது....
இது தவிர யூனிகோடில் இயங்கும், செய்தியோடை உள்ள தமிழ் செய்தித் தளங்களும் இங்கே திரட்டப் படுகின்றன. பல மின்னிதழ்கள் தனிப்பகுதியில் திரட்டப் படுகின்றன. பிறமொழித்தளங்கள், தமிழ் பற்றிய ஆக்கங்கள் கொண்ட ஆங்கில, இந்தி வலைப்பதிவுத் தளங்கள் போன்றவையும் திரட்டப் படுகின்றன.
போதுமான அளவில் தமிழில் திரட்டிகள் இயங்கும் நிலையில் இம்மாதிரி ஒரு திரட்டியின் அவசியம் என்ன?
- அனைத்துத் தமிழ் திரட்டுகளையும் ஒருசேரப் பார்வையிடும் வசதி...
-
அவசரமாக முக்கிய திரட்டிகளில், வலைப்பதிவுகளில் கடைசி செய்திகளை பார்வையிடும் வசதி.
-
ஒன்றையொன்று எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
- திரட்டிகளால் திரட்டப்படாத தமிழ்ப்பதிவுகளையும் பார்வையிடும் வசதி.
- தமிழ்ச்செய்திகளை திரட்டும் வசதி
தனித்தனியாக ஒவ்வொரு திரட்டியிலும் பார்வையிடும் போது தான் அந்தந்த திரட்டிகள் தரும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் அப்படிப் பயன்படுத்த நேரம் இல்லாதவர்கள், திரட்டிகளின் முகப்பை மட்டும் பார்வையிடுபவர்களுக்கு அனைத்துத் திரட்டிகளின் சாரத்தையும் ஒரே இடத்தில் தருகிறது தமிழ்.கணிமை.காம்.
எளிதாக அந்தந்த திரட்டிகளின், தளங்களின் பெயர்களை சுட்டியவுடன் அந்தந்த திரட்டிகளின், தளங்களின் திரட்டுகளை உடனடியாக பார்வையிடலாம்.
விக்சனரியில் தேடும் வசதி தரும் தமிழூற்று, சினிமா செய்திகள் போன்றவையும் தனியாக இணைக்கப் பட்டுள்ளன.
ஒரு இணைய வாசகருக்கு தமிழில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் யூனிகோடு ஆக்கங்களை உடனுக்குடன் பார்வையிடத் தேவையான வசதிகளைத் தருவது என்பதே தமிழ்.கணிமை தளத்தின் நோக்கமாகும்.
தமிழ்.கணிமை.காம் பற்றிய உங்கள் கருத்துக்களை kanimai.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தமிழ்.கணிமை.காம் உங்களுக்கு பயனுள்ளது எனக்கருதினால் உங்கள் வலைப்பதிவில், தளத்தில் தமிழ்.கணிமை தளச்சுட்டியை இணைத்துக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே திரட்டிகளில் இணைக்கப் பட்டுள்ள பதிவுகள் அந்தந்த திரட்டிகளின் தொடுப்பில் தானாகவே திரட்டப் பட்டுவிடும். திரட்டிகளில் இணைக்கப் படாத ஏதேனும் ஒரு வலைப்பதிவு இதில் திரட்டப்படவில்லை எனக்கருதினால், அல்லது எந்தப் பிரிவில் வரவாய்ப்பு உள்ளது என அறிய விரும்பினால் எழுதுங்கள். தளமேம்படுத்தல் குறித்த ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
நன்றி.
அன்புடன்
தமிழ்.கணிமை.காம்
குறிப்பு: இங்குத் திரட்டப்படும் தலைப்புகள் மற்றும் செய்திகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கங்கள் அந்தந்த வலைப்பதிவாளர்களின் பொறுப்பாகும். அவற்றின் தன்மை மற்றும் செயல்பாடுகளுக்கு தமிழ்.கணிமை.காம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
*